search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து விமான நிலையம் மூடப்பட்டது"

    நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டியூன்டின் விமான நிலையத்தில் இன்று கேட்பாரற்று கிடந்த மர்ம பார்சலால் ஏற்பட்ட பீதியை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டது. #Suspiciouspackage #Dunedinairport #Dunedinairportclosed
    வெலிங்டன்:

    நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் ஒட்டாகோ துறைமுகத்தையொட்டி டியூன்டின் என்னும் சிறிய நகரம் அமைந்துள்ளது. சுமார் 1.25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகரின் விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல் பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வாசல் பகுதியில் (உள்நாட்டு நேரப்படி) இன்றிரவு சுமார் 8 மணியளவில் ஒரு மர்ம பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசாரும், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். விமான நிலையத்தின் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் நகரில் இருந்து டியூன்டின் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரு விமானங்கள் அருகாமையில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இங்கிருந்து செல்ல வேண்டிய சுமார் 300 பயணிகளுக்கு நாளை மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விமான நிலையத்தில் சோதனை நடப்பதால் அருகாமையில் இருக்கும் 86-வது தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரு மசூதிகளில் சமீபத்தில் இரு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் உட்பட சுமார் 50 பேர் உயிரிழந்த நிலையில் இன்று விமான நிலையத்தில் காணப்பட்ட மர்ம பார்சல் செய்தி அந்நாட்டு மக்களிடையே பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #Suspiciouspackage #Dunedinairport #Dunedinairportclosed
    ×